இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஈபிஎஸ் வாழ்த்து

by Staff / 02-09-2023 03:19:25pm
இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஈபிஎஸ் வாழ்த்து

சூரியனை ஆய்வு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட 'ஆதித்யா எல்1' செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. விண்கலத்தை சுமந்து சென்ற பிஎஸ்எல்வி-சி57 ராக்கெட்டில் இருந்து ஆதித்யா எல் 1 விண்கலம் வெற்றிகரமாக பிரிந்தது. விண்கலம் குறிப்பிட்ட சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா L.1 விண்கலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது என்ற செய்தி அறிந்து மகிழ்ச்சியடைந்தேன். தமிழகத்தைச் சேர்ந்த திட்ட இயக்குநர் நிகர்ஷாஜி மற்றும் குழுவினருக்கு அதிமுக சார்பாக வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories