நடப்பட்ட நாற்றுகளுக்கிடையே இறந்தவரின் சடலத்தை சுமந்து சென்ற அவலம்.

by Editor / 09-11-2022 09:19:16am
 நடப்பட்ட நாற்றுகளுக்கிடையே இறந்தவரின் சடலத்தை சுமந்து சென்ற அவலம்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே தும்பைப்பட்டி செட்டியார்பட்டி கிராமத்தில் மயானத்திற்கு போதிய பாதை வசதி இல்லாத காரணத்தால் அப்பகுதியில் இன்று உயிரிழந்த 60 வயது மதிக்கத்தக்க நபரின் சடலத்தை பொதுமக்கள், நடப்பட்ட நாற்றுகள் மற்றும் வாழை தோட்டத்திற்கு இடையே இறந்தவரின் உடலை சுமந்து சென்று அடக்கம் செய்தனர். தங்களது கிராமத்தில் மயானத்திற்கு செல்ல உரிய சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags :

Share via