மது விற்பனை செய்த இளைஞர் கைது

கோவை மாவட்டம் செல்வபுரம் பகுதியில் உள்ள பெட்டி கடையில் சட்டவிரோதமாக மறைத்து வைத்து, மது விற்பனை நடைபெறுவதாக செல்வபுரம் காவல் துறையினருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது தகவலின் அடிப்படையில் செல்வபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர், பிரசாந்த் தலைமையில் தகவல் கிடைத்த பெட்டி கடையில் திடீர் ஆய்வு செய்தனர் அங்கு மது விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 25 வயதான முனியசாமி என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்து மேலும் இது குறித்த விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :