பெண் ஐஏஎஸ் - ஐபிஎஸ் அதிகாரிகள் மோதல்
கர்நாடகாவில் ஐஏஎஸ் அதிகாரி ரோகினி சிந்துரி மற்றும் ஐபிஎஸ் அதிகாரி ரூபா ஆகியோருக்கு இடையேயான மோதல் முற்றிய நிலையில் இருவரும் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். ரோகினி சிந்தூரி, பாஜகவைச் சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவரை சந்தித்த புகைப்படத்தை சமீபத்தில் ரூபா வெளியிட்டார். மேலும், அவர் சக ஐஏஎஸ் அதிகாரிகள் சிலருக்கு தனது அந்தரங்க புகைப்படங்களை வாட்ஸ்அப் மூலம் அனுப்பியதாகவும் ரூபா குற்றம்சாட்டினார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ரூபாவை மனநோயாளி என விமர்சித்துள்ளார் ரோகிணி. இருவருக்கும் மோதல் முற்றிய நிலையில், இருவரும் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.
Tags :