தொடர் விடுமுறை காரணமாக திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

by Editor / 14-08-2022 12:39:40pm
தொடர் விடுமுறை காரணமாக திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

தொடர் விடுமுறை காரணமாக திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. தொடர்ந்து, நாளை ஞாயிறுக்கிழமை என்பதால் திருப்பதிக்கு ஏராளமான அளவில் பக்தர்கள் வந்து குவிந்துள்ளனர். பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதை முன்னிட்டு 21ம் தேதி வரை விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இலவச தரிசனத்திற்காக திருப்பதி மலையில் உள்ள வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்தில் இருக்கும் 62 அறைகளிலும் பக்தர்கள் நிரம்பி உள்ளனர். அங்கு இடம் கிடைக்காத பக்தர்கள் சுமார் 5 கிலோ மீட்டர் நீள வரிசையில் வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்திற்கு வெளியே சாமி தரிசனத்திற்காக காத்திருக்கின்றனர். இதனால் இலவச தரிசனத்திற்காக 2 நாட்கள் வரை வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை நிலவுகிறது.

 

Tags :

Share via