கால வரையற்ற விடுமுறை சமூக வலைதளங்களில் பரவி வருவது வதந்தி :அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி,

by Editor / 29-11-2021 07:34:39pm
கால வரையற்ற விடுமுறை சமூக வலைதளங்களில் பரவி வருவது வதந்தி  :அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி,

தமிழகத்தில்  கொரோனா ஊரடங்குக்கு பிறகு, பள்ளி, கல்லூரிகள் ஒவ்வெரு கட்டங்களாக திறக்கப்பட்டு வருகிறது.10,12 வகுப்புக்களைத்தவிர இன்னும் முழுமையாக பள்ளிகள் செயல்படவில்லை இந்த நிலையில், தற்போது, கனமழை காரணமாக இன்று பெருமான்மையான மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.மேலும் நாளை 30ஆம் தேதியும்  பல மாவட்டங்களுக்கு பள்ளி,கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டு வருகிறது 

இந்த நிலையில்  கொரோனா தொற்றின் புதிய பரிணாமமாக ஒமைக்ரான் தொற்று அச்சுறுத்தி வருகிறது.ஓமீக்ரான் வகை கொரோனாத் தொற்றை எதிர்கொள்ள உலக நாடுகள் ஆயத்தமாக  இருக்க வேண்டும்.என  உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில்  தமிழகத்தில், பள்ளி, கல்லூரிகளுக்கு கால வரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தீயாக ஒரு வதந்தி செய்தி பரவிவருகிறது..இது தொடர்பாக மிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கூறியிருப்பதாவது:சமூக வலைதளங்களில் பரவி வருவது வதந்தி என்றும், புதிய வகை வைரஸ் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்பது முற்றிலும் தவறான செய்தி என்று தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via