மகனின் நிலைக்கண்டு வேதனையடைந்த தாய்,தந்தை,மகன் 3 பேரும் தற்கொலை.

by Editor / 28-09-2024 09:18:18am
மகனின் நிலைக்கண்டு வேதனையடைந்த தாய்,தந்தை,மகன் 3 பேரும் தற்கொலை.

 தென்காசி மாவட்டம் ஆயக்குடி அருகே உள்ள கம்பளி சீவலப்பேரியான் ரோடு  பகுதியைச் சேர்ந்த முருகேசன் வயது 50 இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகள் மகன் இருந்துள்ளனர். மகளை வீரசிகாமணி என்னும் ஊரில் திருமணம் முடித்துக் கொடுத்த நிலையில்  மகன் கல்லூரி படிப்பை முடித்து வெளியூரில் தங்கி வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. முருகேசனுடன் சேர்ந்து அவரது வயதான தாய் தந்தைகளான பரமசிவன்(70)மற்றும் சுடலை மாடத்தி(65) ஆகிய இருவரும் வசித்து வந்துள்ளனர்  இந்நிலையில்  முருகேசன் ஆய்க்குடியில் உள்ள அமர்சேவா சங்கத்தில் பணிபுரிந்து வந்துள்ளார் அப்பொழுது சில மாதங்களுக்கு முன்பு எதிர்பாராமல் நிகழ்ந்த  வாகன விபத்தில் சிக்கிய முருகேசன் மிகவும் உடல் நலம் குன்றி   மனநலம் பாதிக்கப்பட்டவராக இருந்துள்ளார். உடல்நிலை சரியில்லாத முருகேசனையும் அவரது தாய் தந்தைகளையும் அப்படியே விட்டுவிட்டு முருகேசனின் மனைவி சென்றதாக கூறப்படுகிறது. விரக்தியில் இருந்து வந்த முருகேசனின் தந்தை பரமசிவன் மற்றும் தாய்  சுடலை மாடத்தி ஆகிய இருவரும் மகனின் சூழ்நிலையைக் கண்டு தினம் தினம்  மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளனர்.

 நேற்று 27 ஆம் தேதி மாலையில் கம்பளிக்கு அருகே உள்ள அவர்களது தோட்டத்தில் வைத்து மனநலம் பாதிக்கப்பட்டு இறக்கும் நிலைக்கு சென்ற ஒரே மகனான  முருகேசன் நிலைக்கண்டு வருந்தி வாழ்ந்த அவரது தாய் சுடலை மாடத்தி வாழைப்பழத்தில் குருணை மருந்தை  சேர்த்து முருகேசனுக்கு சாப்பிட கொடுத்துள்ளார். பின்பு கணவர் பரமசிவத்திற்கும் கொடுத்துவிட்டு தானும் சாப்பிட்டுள்ளார் மூவரும் மயங்கி விழுந்து  இறந்துள்ளனர் அந்த வழியே சென்ற சிலர் அதனை கண்டு பார்த்துவிட்டு ஆய்க்குடி   போலீசாருக்கு தகவல் அளித்ததன் பெயரில் போலீசார் வந்து உயிரிழந்த மூவரின் உடல்களையும் மீட்டு  பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து   விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆய்க்குடி அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.

 

Tags : மகனின் நிலைக்கண்டு வேதனையடைந்த தாய்,தந்தை,மகன் 3 பேரும் தற்கொலை.

Share via