குழந்தையை விற்ற 2 செவிலியர்கள் பணியிடை நீக்கம்

by Staff / 27-02-2023 02:25:06pm
குழந்தையை விற்ற 2 செவிலியர்கள் பணியிடை நீக்கம்

விருதுநகர்: சிவகாசி மாரனேரி ஈஸ்வரன் காலனியை சேர்ந்த பாண்டீஸ்வரன், பஞ்சவர்ணம் தம்பதிக்கு ஏற்கனவே இரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் என 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த ஜனவரி 23ஆம் தேதி 4-வதாக பிறந்த பெண் குழந்தையை நாகர்கோவிலை சேர்ந்த மத்திய கூட்டுறவு வங்கி மேற்பார்வையாளர் ஜார்ஜ், ஐரின் தம்பதிக்கு ரூ.40 ஆயிரத்துக்கு சட்டவிரோதமாக விற்பனை செய்துள்ளனர். குழந்தை விற்பனையில் ஈடுபட்ட மாரனேரி அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் அஜிதா, கிராமப்புற செவிலியர் முத்துமாரியம்மாள் ஆகியோர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via

More stories