மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி-குற்றாலத்தில் தடைநீடிப்பு.

by Editor / 22-05-2024 09:19:48am
மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி-குற்றாலத்தில் தடைநீடிப்பு.

திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் இன்று (மே 22) முதல் குளிப்பதற்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது. மழை குறைந்து அருவியில் நீர்வரத்து சீரானதால் சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி வழங்கியபோதும் மாஞ்சோலை செல்வதற்கு தடை நீடிக்கிறது. இன்று திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தேனி ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.அதே சமயம் குற்றால அருவிகளில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க 7 வது நாளாக தடைதொடர்கிறது.

 

Tags : மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி-குற்றாலத்தில் தடைநீடிப்பு.

Share via

More stories

Logo