கள்ளக்காதலனுக்கு சிறுமியை பலிகடா ஆக்கிய அண்ணி கைது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட சுவாசம்பட்டி கிராமம் இப்பகுதியைச் சார்ந்தவர் அலெக்ஸ் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இவனுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில்,அதே பகுதியை சேர்ந்த
சார்லி என்ற பெண்ணிற்கும் அலெக்ஸ்க்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.இந்த நிலையில் சார்லிக்கு திருமணம் ஆனதால் அலெக்ஸ் தனக்கு திருமணமாகாத சிறுவயது பெண்னை அறிமுகம் செய்து தர வேண்டும் என கேட்டதால் சார்லி தனது உறவுக்கார 15 வயது சிறுமியை அலெக்ஸிற்க்கு அறிமுகம் செய்து உள்ளார். இதன் தொடர்ச்சியாக ஆசை வார்த்தை கூறியும் மிரட்டியும் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் பொழுது இருந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறுமியை அலெக்ஸ் அவ்வப்போது பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு தற்பொழுது ஐடிஐ யில் முதலாம் ஆண்டு படித்து வரும் நிலையில் பாலியல் தொல்லை குறித்து தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக சிறுமியின் பெற்றோர் சிங்காரப்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் அலெக்ஸ் மீது வழக்கு பதிவு செய்தனர்.பள்ளி மாணவியை ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்,மேலும் தலைமறைவாக உள்ள அலெக்ஸ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து காவல் துறை தீவிரமாக தேடி வருகின்றனர், அதே சமயம் கள்ளகாதலனுக்கு சிறுமியை அறிமுகம் செய்து வைத்து பலிகடா ஆக்கிய உறவுக்கார பெண் சார்லியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Tags : minor rape class 10



















