இவர்களை தான் அதிக அளவில் டெங்கு தாக்குகிறது
ஏடிஸ் எஜிப்டி கொசுக்கள் அதிகாலையில் அல்லது தாமதமான இரவில் கடிப்பதால் டெங்கு வைரஸ் பரப்பப்படுகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களை அதிக அளவில் டெங்கு தாக்குவது ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. டெங்குவால் ஏற்படும் உயிர் பலியும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், வாரணாசியில் உள்ள பனாரஸ் பல்கலைக்கழகம் இது குறித்து நடத்திய ஆய்வில், 2017க்குப் பின் இந்த ஆண்டுதான் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
Tags :