ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு செயற்கை சுவாசம்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு செயற்கை ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. XBB வகை கொரோனா பாதிப்புடன் நுரையீரல் பாதிப்பும் கண்டறியப்பட்டதால் இயல்பான சுவாசம் மேற்கொள்ள முடியாமல் அவதிப்பட்டு வரும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். கடந்த 15ஆம் தேதி நெஞ்சு வலி காரணமாக போரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளங்கோவன் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளார். முன்னாள் எம்எல்ஏ திருமகன் ஈவேரா மறைவை தொடர்ந்து, பிப்ரவரி 27ஆம் தேதி நடந்த இடைத்தேர்தலில் இளங்கோவன் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags :