வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு நல்ல செய்தி
பிரபல மெசேஜிங் செயலியான வாட்ஸ்அப் தனது பயனர்களின் பாதுகாப்பை அதிகரிக்க மற்றொரு புதிய அம்சத்தை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் புதிய அம்சத்தின் மூலம் பயனர்கள் தங்கள் தனிப்பட்ட சேட்களை மூடி வைக்க வழிவகை செய்யப்படும். இதனை திறக்க வேண்டும் என்றால் பயனரின் கைரேகை அல்லது பாஸ்வேர்டு கொடுத்தால் மட்டுமே அதைப் பார்க்க முடியும். மூடி வைக்கப்பட்ட சாட்களிலிருந்து புகைப்படங்களும், வீடியோக்களும் நேரடியாக கேலரியில் சேமிக்கப்படாது. இந்த வசதி விரையில் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags :