பற்களை பிடுங்கிய விவகாரத்தில் ஏ.எஸ்.பி பல்வீர்சிங் மீதான வழக்கு விசாரணையை தொடங்கியது காவல்துறை.

by Editor / 19-04-2023 08:36:13am
பற்களை பிடுங்கிய விவகாரத்தில் ஏ.எஸ்.பி பல்வீர்சிங் மீதான வழக்கு விசாரணையை தொடங்கியது காவல்துறை.

அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி பல்வீர்சிங் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் 
திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவில் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.இந்தநிலையில் 
மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி பொன் ரகுஇந்த  வழக்கு தொடர்பான  விசாரணை நடத்தி வருகிறார்.பாதிக்கப்பட்டவர்களை நேரடியாக விசாரணைக்கு ஆஜராக அழைப்பு அனுப்பபட்டுள்ளது.பாதிக்கப்பட்ட சுபாஷ் என்பவரை காலை 11 மணிக்கு மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையம் வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.சார் ஆட்சியர் விசாரணை,தேசிய & மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை,உயர்மட்ட அதிகாரி விசாரணை ஆகியவை நடந்து வரும் நிலையில் தற்போது பல்பிடுங்கப்பட்ட விவகாரத்தில் காவல்துறையும் விசாரணையை தொடங்கியுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo