திமுக பிரமுகர் மகன் கொலை; 3 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்

சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த திமுக பிரமுகர் காமராஜ் என்பவரை அக்டோபர் 26ஆம் தேதி, அவரது அலுவலகத்தில் வைத்து மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தனர். எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். முதல்கட்ட விசாரணையில், ரவுடி கும்பல் மாமூல் கேட்ட தகராறில் காமராஜ் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரண்டு தனிப்படைகளை அமைத்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்த நிலையில், மூன்று நபர்கள் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளனர்.
Tags :