அதிமுகவினரை ஒன்றிணைக்க பத்து நாள் கெடு விதித்த செங்கோட்டையன்

by Admin / 05-09-2025 03:04:20pm
அதிமுகவினரை ஒன்றிணைக்க பத்து நாள் கெடு விதித்த செங்கோட்டையன்

பிரிந்து கிடக்கின்ற அதிமுகவினரை ஒன்றிணைக்க பத்து நாள் கெடு விதித்த செங்கோட்டையன்.-

எம்ஜிஆரால் துவக்கப்பட்டு தமிழகத்தில் பலம் பொருந்திய கட்சியாக பல ஆண்டுகள் ஆட்சியில் அமர்ந்திருந்த அதிமுக எம்ஜிஆர் க்கு பின் ஜானகி தலைமையில் ஜெயலலிதா தலைமையிலும் இரண்டு அணிகளாக பிரிந்ததோடு எஸ்டி சோமசுந்தரம் ஆர் .எம் .வீரப்பன்,: திருநாவுக்கரசு போன்றவர்களால் கட்சி உடைபட்ட நிலையில் பின்பு ஒரு சிலர் சேர்ந்து கொள்ள ஒரு சிலர் மாற்றுக் கட்சியில் ஐக்கியமாகினர். இந்நிலையில் ஜெயலலிதா ஆட்சியைப் பிடித்து பத்தாண்டுகளுக்கு மேலாக ஆட்சிப் பொறுப்பில் இருந்த பொழுது அவர் மரணம் சம்பவித்தது. .இதனைத் தொடர்ந்து நான்கு ஆண்டுகால ஆட்சியை அதிமுக நடத்தும் பொருட்டு எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக பதவி ஏற்றார்.. நான்காண்டு ஆட்சி நிறைபெற்ற பிறகு எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஓ.பி. பன்னீர்செல்வத்திற்கும் இடையே ஆன பிரிவு ஆழமாக ஏற்பட்டதன் விளைவாக, அதிமுகவுக்குள் உட்கட்சி பூசல் தொடர்ந்தது. .தினகரன் போன்றவர்கள் அம்மா மு.கவை தொடங்கி நடத்தி வந்தனர். சசிகலா போன்றவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து அதிமுக ஆட்சியை மீண்டும் அமைக்க வேண்டும் என்று தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக குரல் கொடுத்துக்கொண்டு வருகிறார்.. எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர்செல்வம் இருவர்களுக்கு இடையில் விரிசல் ஏற்பட்டு பொதுக்க்குழு மூலம் ஓ .பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார் .அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து கட்சி பணியில் பணியாற்றி வருகிற நிலையில், கட்சி பலகீனம் அடைந்திருப்பதாகவும் அதனை பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தை பல பிரமுகர்கள் எடுத்துச் சொல்லி வந்த நிலையில், அதிமுகவிற்குள் முக்கிய முகமாக இருக்கும் செங்கோட்டையன் சமீபகாலமாக அ.தி.மு.கவை பலப்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் செயல்பட்டு வந்தார். அதை இன்று வெளிப்படையாக பத்து நாள் கெடு விதித்து அதிமுகவை ஒருங்கிணைத்தால் ஆட்சியை கைப்பற்றலாம் என்கிற நோக்கில் தம் கருத்தை வெளியிட்டுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி அனைவரும் ஒருங்கிணைந்து பேசுவதற்கு வாய்ப்பு வழங்க வேண்டும். அதற்கு அவர் முன்வர வேண்டும் என்கிற மாதிரியான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.. இதனிடையே பாரதிய ஜனதா- அதிமுக கூட்டணி தொடர்ந்து கொண்டிருக்கின்ற பொழுது, அதனோடு அங்கும் வகித்த அம்மா முன்னேற்றக் கழகம் ,பன்னீர்செல்வம் போன்றவர்கள் வெளியேறி உள்ள நிலையில். அந்தக் கூட்டணிக்கு பலகீனம் ஏற்படும் என்கிற நிலையில் அனைவரும் ஒருங்கிணைந்து செயலாற்றினால் வெற்றியை பெற முடியும் என்கிற கருத்து முன் வைக்கப்பட்டு இன்றைக்கு அது விவாத பொருளாக மாறி உள்ளது..

 

 

Tags :

Share via