மும்பை - கன்னியாகுமரி இடையே இன்று சிறப்பு ரெயில் இயக்கம்.

by Staff / 22-12-2022 03:13:09pm
மும்பை - கன்னியாகுமரி இடையே இன்று சிறப்பு ரெயில் இயக்கம்.

ரெயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு மும்பை சி. எம். எஸ். டி. யில் இருந்து
கன்னியாகுமரிக்கு அதிவிரைவு சிறப்பு ரெயில் இன்று ( வியாழக்கிழமை ) இயக்கப்படுகிறது. இந்த ரெயில் ( எண்: 01461 ) மும்பையில் இருந்து இன்று பிற்பகல் 3. 30 மணிக்கு புறப்பட்டு கேரளா வழியாக நாளை ( வெள்ளிக்கிழமை ) இரவு 11. 20 மணிக்கு கன்னியாகுமரி வந்து சேரும். இதே போல் கன்னியாகுமரியில் இருந்து அதிவிரைவு ரெயில் ( எண்: 01462 ) 24 - ந்தேதி மதியம் 2. 15 மணிக்கு புறப் பட்டு கேரளா வழியாக ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 11 மணிக்கு மும்பையை சென்றடையும். மேற்கண்ட தகவல் தெற்கு ரெயில்வேயின்திருவனந்தபுரம் கோட்டம் மக்கள் தொடர்பு அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

 

Tags :

Share via