200 குடும்பங்களுக்கு தலா ரூ.1,000 வழங்கிய நடிகர் பாலா

மிக்ஜாம் புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு, விஜய் டிவி பிரபலம் நடிகர் பாலா, 200 குடும்பங்களுக்கு தலா ரூ.1,000 நிதி உதவி வழங்கியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையே வெள்ளக்காடாக மாறியுள்ள நிலையில், பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர்- அடையார் ஆற்றங்கரையோரம் இருந்த மக்களுக்கு நடிகர் பாலா நிதி உதவி அளித்துள்ளார். குடும்பத்திற்கு தலா ரூ.1,000 என மொத்தம் ரூ.2,00,000 தனது சொந்த பணத்தை மக்களுக்கு நிவாரண உதவியாக நேரடியாகச் சென்று வழங்கினார். பால், குடிநீர், உணவு இன்றி தவிக்கும் மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருவதாக பாலா தெரிவித்தார்.
Tags :