தமிழக சட்டசபைக்கு 3 நாட்கள் விடுமுறை

by Editor / 19-08-2021 06:19:46pm
தமிழக சட்டசபைக்கு 3 நாட்கள் விடுமுறை


 

தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 13-ந்தேதி தொடங்கியது. முதல் நாள் பொது பட்ஜெட்டும் அதற்கு மறுநாள் வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. 16-ந்தேதி முதல் பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதன்படி கடந்த 4 நாட்களாக விவாதம் நடைபெற்று வந்தது.


பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் பற்றி ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.  பட்ஜெட் மீதான விவாதத்தின் கடைசி நாளாகும்.இந்த நிலையில் மொகரம் பண்டிகையையொட்டி அரசு விடுமுறை தினம் என்பதால் சட்டசபை கூட்டம் கிடையாது. 


அதற்கு அடுத்த நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் சட்டசபை கூட்டம் நடைபெறாது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நாளை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை சட்டசபை கூட்டம் நடைபெறாது.

3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு 23-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் மீண்டும் கூடும் சட்டசபை கூட்டம் அடுத்த மாதம் (செப்டம்பர்) 13-ந்தேதி வரை நடைபெறுகிறது. முன்னதாக செப்டம்பர் 21-ந்தேதி வரை சட்டசபை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
 

 

Tags :

Share via

More stories

Logo