10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்.. போலீசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

by Editor / 17-07-2025 01:26:09pm
10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்.. போலீசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே 10 வயது சிறுமியை கடத்திச் சென்ற இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் போலீசார் மீது கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “ நகைக்காக அப்பாவியை அடித்து கொன்ற போலீஸ், பாலியல் குற்றவாளியை கைது செய்யாதது ஏன்?. குற்றவாளியின் அடையாளங்கள் தெரிந்தும் கைது செய்யாமல் இருப்பது ஏன்?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

 

Tags :

Share via