இந்தியாவில் கொரோனா வைரஸல் 47 லட்சத்து 29 ஆயிரத்து 548 பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

by Staff / 06-05-2022 01:03:40pm
இந்தியாவில் கொரோனா வைரஸல்  47 லட்சத்து 29 ஆயிரத்து 548 பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொடர்பாக மொத்தம் 47 லட்சத்து 29 ஆயிரத்து 548 பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பு இன்று வெளியிட்டுள்ள சர்ச்சைக்குரிய கணித மாதிரி மதிப்பீட்டின் அடிப்படையில் கணக்கிடப்பட்ட கொரோனா உயிரிழப்புகள் குறித்த தரவுகளை இந்தியா நிராகரித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது
உலக அளவில் கொரோனாவால் அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடு இந்தியா. உலகம் முழுவதும் 2020-ஜனவரி முதல் 2021-டிசம்பர் வரையிலான காலகட்டத்தில், கொரோனாவால் நேரடியாகவும் மறைமுகமாகவும் மொத்தம் 1.49 கோடிக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

2020-ஜனவரி முதல் 2021-டிசம்பர் வரை, இந்தியாவில் கொரோனா வைரஸ் தொடர்பாக மொத்தம் 47 லட்சத்து 29 ஆயிரத்து 548 பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் இறந்திருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் கூறும்வேளையில், 47 லட்சம் வரையில் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என உலக சுகாதார அமைப்பால் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா உயிரிழப்பு கணக்கீட்டில் ‘கணித மாதிரி மதிப்பீட்டை’ பயன்படுத்தும் உலக சுகாதார அமைப்பின் நடவடிக்கைக்கு, இந்திய அரசு ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்தது வந்தது.

 

Tags :

Share via