கன்னியாகுமரி அருகே மாயமான தொழிலாளி கொலை கைதான வாலிபர்கள் வாக்குமூலம்.

by Staff / 18-10-2022 01:15:39pm
கன்னியாகுமரி அருகே மாயமான தொழிலாளி கொலை கைதான வாலிபர்கள் வாக்குமூலம்.

கன்னியாகுமரி அருகே மாயமான தொழிலாளி கொலை கைதான வாலிபர்கள் வாக்குமூலம்.
கன்னியாகுமரி அருகே உள்ள மகாதானபுரத்தை அடுத்த சுண்டன்பரப்பைச் சேர்ந்தவர் மாசாணம் என்ற கண்ணன் (வயது 32). தொழிலாளி. இவரது மனைவி இசக்கியம்மாள் என்ற செல்வராணி. இவர்க ளுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மாசாணம் என்ற கண்ணன் கடந்த மாதம் 18-ந் தேதி "திடீர்"என்று மாயமானார். இது குறித்து அவரது மனைவி செல்வராணி கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர். அப்போது மாசாணம் என்ற கண்ணனை கடைசியாக பாலன் என்ற பாலகிரு ஷ்ணன் (34) அதே ஊரை சேர்ந்த விக்னேஷ் (19) ஆகியோர் அழைத்துச் சென்றது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து பாலன் மற்றும் விக்னேஷ் ஆகிய 2 பேரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி னர். முதலில் 2 பேரும் முன்னுக்கு பின் முரணான தகவல்களை கூறினர். இதையடுத்து 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது சம்பவத்தன்று மாசாணம் என்ற கண்ணன், பாலன் என்ற பால கிருஷ்ணன் மற்றும் விக்னேஷ் ஆகிய 3 பேரும் ஒன்றாக சேர்ந்து மது குடித் துள்ளனர். கண்ண னுக்கும் பாலனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றிய நிலையில் பாலன் மற்றும் விக்னேஷ் சேர்ந்து கண்ணனை கல்லால் அடித்துக் கொலை செய்ததாக தெரிகிறது. பின்னர் கண்ணனின் உடலை சுசீந்திரம் ஆசிரமம் அருகே உள்ள ஊட்டுவாழ்மடம் செல்லும் பாதையில் வீசிவிட்டு சென்று உள்ளனர். மேற்கண்ட விவரங்கள் விசாரணையில் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து கன்னியாகுமரி போலீஸ் டி. எஸ். பி. ராஜா, இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் நேற்று ஊட்டுவாழ் மடம் செல்லும் பாதையில் சென்று பார்வை யிட்டனர். அப்போது அங்கு ஒரு மனித எலும்புக்கூடு கிடந்தது. எலும்பு கூட்டின் அருகே ஒரு சட்டை கிடந்தது. அதை போலீசார் கைப்பற்றி கண்ணனின் மனைவியிடம் காண்பித்தனர். அப்போது அது தனது கணவர் அணிந்தி ருந்த சட்டை தான் என்பதை அவர் உறுதிப்ப டுத்தினார். அத்துடன் சட்டையை கண்ட வுடன் அவர் கண்ணீர் விட்டு கதறி அழுதார். இதைத்தொடர்ந்து எலும்பு கூடாக கிடந்தது கண்ணனின் உடல் தான் என்பதை போலீசார் உறுதி செய்தனர். பின்னர் துண்டு துண்டாக கிடந்த எலும்புக்கூட்டை போலீ சார் கைப்பற்றி ஆசாரிப் பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக பாலன் என்ற பாலகிருஷ்ணன் மற்றும் விக்னேசை கைது செய்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினார்கள். அப்போது பாலன் என்ற பாலகிருஷ்ணன் அளித்த வாக்குமூலம் வருமாறு: - நான் சுண்டன்பரப்பில் வசித்து வருகிறேன். எங்கள் ஊரை சேர்ந்த கண்ணன் எனது மாமா ஆவார். இந்த உறவு முறையில் எங்கள் வீட்டுக்கு அவர் அடிக்கடி வந்து செல்வார். இதற்கிடையில் எங்கள் வீட்டில் அடிக்கடி பேன், சிலிண்டர் மற்றும் பொருட்கள் திருட்டு போனது. இந்த நிலையில் டாஸ்மாக் மதுகடை பாரில் மது அருந்திவிட்டு போதையில் எனது வீட்டில் பொருட் களைஅவர்தான் திருடிய தாக உளறினார். இது குறித்து நான் அவரிடம் கேட்டேன். அப்போது அவர் என்னை தரக்குறைவாக பேசினார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன். எனது நண்பரான சாமிதோப்பை சேர்ந்த விக்னேஷ் என்பவருடன் சேர்ந்து கண்ணனை மது அருந்து வதற்கு வரும்படி சுசீந்திரம் ஆசிரமம் அருகே உள்ள ஊட்டுவாழ்மடம் செல்லும் பாதைக்கு அழைத்துச் சென்றோம். அங்குள்ள முள் புதருக்குள் வைத்து நானும் விக்னேசும் சேர்ந்து அவரை கொலை செய்து பிணத்தை அங்கேயே வீசிவிட்டு சென்று விட் டோம். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார். இதற்கிடையில் கைது செய்யப்பட்ட பாலன், விக்னேஷ் இருவரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

 

Tags :

Share via