மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய நாளை தென் மாவட்டங்களுக்கு செல்கிறேன்- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

by Staff / 19-12-2023 01:50:33pm
மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய நாளை தென் மாவட்டங்களுக்கு செல்கிறேன்- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

இன்று டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி சென்ற முதலமைச்சர் மு க ஸ்டாலின் தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில்,..

தென் மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை அமைச்சர்களும் அதிகாரிகளும் விரைந்து நிவாரண பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டிய இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்ததோடு மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய நாளை தென் மாவட்டங்களுக்கு செல்வதாகவும் தெரிவித்தார்...

 

Tags :

Share via

More stories