விழுப்புரம்,புதுச்சேரிபகுதியில் மழை பெய்து வருகிறது.

by Editor / 18-12-2022 10:16:53am
விழுப்புரம்,புதுச்சேரிபகுதியில் மழை பெய்து வருகிறது.

விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம்,ஆரோவில்,வானூர் சுற்றுப்புற பகுதியில் காலை முதலே மேகமூட்டத்துடன் காணப்பட்டது இந்த நிலையில் கடற்கரை பகுதியான கோட்டகுப்பம்,ஆரோவில்,பொம்மையார்பாளையம்,பெரிய முதலியார் சாவடி, சின்ன முதலியார் சாவடி,போன்ற பல்வேறு பகுதிகளில் லேசானமழை பெய்து வருகிறது.

இதேபோன்று புதுச்சேரியில் தற்போது மிதமான மழை பெய்து வருகிறது.காலை முதலே மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் தற்போது நகரம் மற்றும் கிராம பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.
கடற்கரை சாலை, முதலியார் பேட்டை, முத்தியால்பேட்டை, பேருந்து நிலையம் உள்ளிட்ட நகர பகுதிகளிலும் பாகூர், திருபுவனை, ஊசூடு உள்ளிட்ட கிராம பகுதிகளிலும் மதமான மழை பெய்து வருகிறது.

 

Tags :

Share via