உலகின் மிகப்பெரிய பனிப்பாறை உடைந்தது!

அண்டார்டிகாவில் உலகின் மிகப்பெரிய பனிப்பாறை உடைந்து கடலுக்குள் விழுந்ததாக ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த பனிப்பாறை டெல்லி நகரை போல் மூன்று மடங்கு பெரியது என தெரியவந்துள்ளது.
புவி வெப்பமயமாதல் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. இயற்கையை மனிதர்களாகிய நாம் மாற்றுவதால் பருவமழை தப்பி பெய்வது, கடல் உள் வாங்குவது என பல்வேறு மாறக்கூடாத மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இவை எல்லாம் பெரும் ஆபத்தில் கொண்டு போய் முடியும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து கூறிவருகின்றனர். ஆனாலும் உலகம் முழுவதும் இயற்கைக்கு எதிரான செயல்பாடுகள் தொடர்கிறது. அதன் வெளிப்பாடு தான் உலகின் மிகப்பெரிய பனிப்பாறை உடைந்திருப்பது.
ஏ-76 என்ற பெயர் கொண்ட உலகின் மிகப்பெரிய பனிப்பாறை வெடல் கடற்பகுதிக்குள் உடைந்து விழுந்து மிதந்து கொண்டிருப்பதாக ஐரோப்பிய விண்வெளி நிறுவன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த பனிப்பாறை இன்னும் சில நாட்களில் துண்டு துண்டாக உடையும் என தெரிகிறது. இந்த பாறை 4,320 சதுர கி.மீ., 175 கி.மீ., நீலமும், 25 கி.மீ., அகலமும் கொண்டது. அதாவது டெல்லி நகரை விட மூன்று மடங்கு பெரியது. இதனால் கடலின் நீரின் மட்டம் உயர்ந்து, பல கரையோர நகரம் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உலக வெப்பமயமாதலால் கடந்தாண்டு உடைந்து விழுந்த ஏ23ஏ என்ற பனிப்பாறையைவிட ஏ76 பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :