சைபர் குற்றங்கள் பட்டியலில் 10வது இடத்தில் இந்தியா

by Staff / 12-04-2024 12:12:26pm
சைபர் குற்றங்கள் பட்டியலில் 10வது இடத்தில் இந்தியா

உலகில் உள்ள 100 நாடுகளில் சைபர் கிரைம் அதாவது இணையம் மூலம் நடைபெறும் குற்றங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இந்த பட்டியலில் இதில் இந்தியா 10வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் இணையவழியில் முன்பணம் செலுத்தினால் அதிகப் பணம் அல்லது பரிசு கிடைக்கும் என்ற மோசடி அதிகளவில் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல பல்வேறு நாடுகளில் வெவ்வேறு வழிகளில் சைபர் குற்றங்கள் நடைபெறுகின்றன. அதன்படி அதிக சைபர் குற்றங்கள் நடைபெறும் நாடுகளில் முதலிடத்தில் ரஷ்யாவும், 2வது இடத்தில் உக்ரைனும், 3வது இடத்தில் சீனாவும் உள்ளன.

 

Tags :

Share via

More stories