கடன் செயலி வாயிலாக பல கோடி மோசடி...ஏழு பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் நிஷா, 23. டில்லியைச் சேர்ந்தவர் பிரகாஷ் சர்மா, 21. இவர்கள், கூட்டாளிகளுடன் சேர்ந்து, டில்லியில் போலி கால்சென்டர் நடத்தி வந்தனர். இவர்கள், கடன் செயலி வாயிலாக, தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்களிடம் பல கோடி ரூபாய் சுருட்டினர். இந்த வழக்கில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல, சித்தாலபாக்கத்தைச் சேர்ந்தவர் அஜய்ராகுல், 23. இவர் மீது, ராயப்பேட்டை காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. இவர்கள் உட்பட, ஏழு பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க, கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, நிஷா உட்பட ஏழு பேரை, குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் நேற்று கைது செய்தனர்.
Tags :
















.jpg)


