2ஆண்டுகளுக்கு பிறகு விழாக்கோலம் பூண்ட மதுரை! சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவக்கம்.

2ஆண்டுகளுக்கு பிறகு விழாக்கோலம் பூண்ட மதுரை! சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவக்கம்.
ஏப்ரல் 14, 2022– வியாழக்கிழமை – ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்
ஏப்ரல் 15, 2022– வெள்ளிக்கிழமை – திருத்தேரோட்டம் .
ஏப்ரல் 16, 2022– சனிக்கிழமை – தங்கக்குதிரையில் வெண்பட்டுடுத்தி ஸ்ரீ கள்ளழகர் வைகை ஆற்றில் காலை 5.50 முதல் 6.20 மணிக்குள் வைகையில் எழுந்தருள்கிறார்.
1000 பொன்சம்பரத்துடன் – சைத்யோபசாரம் வண்டியூர் (இரவு)/ தீர்த்தவாரியுடன் நிறைவுபெறுகிறது.
ஏப்ரல் 18, 2022 – திங்கள்கிழமை- (காலை) மோகனாவதாரம் – (இரவு) கள்ளழகர் திருக்கோலம் புஷ்ப பல்லக்கு – மைசூர் மண்டபம்.
12 நாட்கள் சிறப்பாக நடைபெறும் இவ்விழாவில் இன்று 10:35 மணிக்கு மேல் கொடி ஏற்றப்படுகிறது. வருகிற 12-ஆம் தேதி முக்கிய நிகழ்ச்சியாக மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், 13ஆம் தேதி திக்விஜயம் ஆகியவை நடைபெறுகிறது. 14ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வைபவம் நடக்கிறது.
இதை தொடர்ந்து 15 ஆம் தேதி மாசி வீதிகளில் தேரோட்டம் நடைபெறும் நிலையில் 16ஆம் தேதி தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
Tags :