பெண் அமைச்சரை இழிவாக பேசிய பாஜக தலைவர் கைது. 

by Editor / 19-12-2024 08:39:05pm
பெண் அமைச்சரை இழிவாக பேசிய பாஜக தலைவர் கைது. 

 கர்நாடகா பெண் அமைச்சர் குறித்து இழிவாக பேசிய விவகாரத்தில் பாஜக தலைவரும் மேலவை உறுப்பினருமான சி.டி.ரவி கைது செய்யப்பட்டுள்ளார். அண்ணல் அம்பேத்கர் குறித்த அமித்ஷாவின் பேச்சை கண்டிக்கும் போராட்டத்தின் போது, சட்டப்பேரவையில் வைத்து தன்னை இழிவு செய்யும் மோசமான வார்த்தையை சி.டி.ரவி பேசியதாக மகளிர் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் போலீசில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து, சி.டி.ரவியை கைது செய்த போலீசார் அவரை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்றனர்.

 

Tags : பெண் அமைச்சரை இழிவாக பேசிய பாஜக தலைவர் கைது 

Share via