பெண்ணிடம் அத்துமீறிய ஆடிட்டர் .
திருவள்ளூரைச் சேர்ந்தவர் ராபர்ட் (48) என்பவர் தனியார் நிதி நிறுவனத்தில் ஆடிட்டராக வேலை பார்த்து வந்தார். நேற்று (ஏப்ரல் 11) காலை பணி நிமித்தமாக வேறொரு நிறுவனத்துக்குச் சென்றபோது அங்குள்ள 25 வயது இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பெண் போலீசில் புகார் அளித்த நிலையில் இருவரையும் அழைத்து சமரசம் செய்த போலீசார் இரவு 7 மணிக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் பெண்ணின் தம்பி, ஆடிட்டரை அடித்துக் கொலை செய்துள்ளதாகவும் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்.
Tags :



















