நடிகர் ரஜினியின் சகோதரர் சத்திய நாராயணராவ் அண்ணாமலையார் ஆலயத்தில் சாமி தரிசனம்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் திருக்கார்த்திகை தீப திருவிழா கடந்த 13ம் தேதி மாலை 6 மணிக்கு 2668 அடி மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. அதனை தொடர்ந்து 11 நாட்கள் ஜோதி பிழம்பாக மலை உச்சியில் பக்தர்களுக்கு அண்ணாமலையார் காட்சியளிப்பார். முக்கிய பிரமுகர்கள், உயர் அதிகாரிகள் என அனைவரும் இந்த 11 நாட்களும் திருவண்ணாமலைக்கு வருகை தந்து அண்ணாமலையார் மலையில் ஏற்றப்பட்ட மகா தீபத்தை கண்டு தரிசனம் செய்வார்கள்.
அது போல் இன்று மாலை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சகோதரர் சத்திய நாராயண ராவ் அண்ணாமலையார் திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். அப்போது கோயிலில் பூஜை நடைபெற்றுக் கொண்டிருந்தால் பக்தர்களோடு பக்தராக கொடி மரத்தின் அருகில் அமர்ந்திருந்தார். பின்னர் வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்தார்.
இதனை தொடர்ந்து ஆறு மணிக்கு மலை உச்சியில் பிரகாசமாக காட்சியளித்த மகா தீபத்தை ரஜினி அண்ணன் சத்திய நாராயணராவ் வணங்கினார்.
Tags : நடிகர் ரஜினியின் சகோதரர் சத்திய நாராயணராவ் அண்ணாமலையார் ஆலயத்தில் சாமி தரிசனம்.