பண தகராறில் 6 துண்டுகளாக வெட்டி ஃப்ரிட்ஜில் வைத்த சம்பவம்

தெலங்கானா மாநிலத்தில் அனுராதா என்ற பெண் 6 துண்டுகளாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தில் அனுராதா (55) என்ற பெண்ணை வீட்டு உரிமையாளரான பி.சந்திர மோகன் (48) கத்தியால் குத்தி 6 துண்டுகளாக வெட்டி கொலை செய்துள்ளார். மேலும், அவரது உடல் பாகங்களை குளிசாதன பெட்டியில் அடைத்து வைத்து நாற்றம் வராமல் இருக்க ரூம் ஃப்ரெஷ்னரை பயன்படுத்தியுள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கந்து வட்டிக்காரரான அனுராதாவிடம் சந்திர மோகன் 7 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இதனால் ஏற்பட்ட பண தகராறில் இந்த கொலை நடந்ததாக தெரிவித்துள்ளனர்.
Tags :