முக்கிய நிகழ்வுகள் 07.03.2022

by Editor / 07-03-2022 01:13:20pm
முக்கிய நிகழ்வுகள் 07.03.2022

 1876-ஆம் ஆண்டு மார்ச் 7-ஆம் தேதி அலெக்சாண்டர் கிரகாம்பெல் தொலைப்பேசிக்கான காப்புரிமம் பெற்றார்.

1919-ஆம் ஆண்டு மார்ச் 7-ஆம் தேதி திரைப்பட நடிகர் எம்.என்.நம்பியார், கேரளாவில் பிறந்தார்.


பிறந்த நாள் :-

ஜோசப் நிசிபோர் நியெப்ஸ்
உலகின் முதலாவது ஒளிப்படத்தை கண்டுபிடித்த ஜோசப் நிசிபோர் நியெப்ஸ் (Joseph Nicephore Niepce) 1765-ஆம் ஆண்டு மார்ச் 7-ஆம் தேதி பிரான்ஸில் சாவோன் எட் லொய்ரேயில் உள்ள சாலோன் சர் சாவோன் என்னும் இடத்தில் பிறந்தார்.
இவர் 1825-ஆம் ஆண்டு மனிதனையும், குதிரையொன்றையும் காட்டும் 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஓவியம் ஒன்றை ஒளிப்படமாக எடுத்தார்.

இவர் 'இருட்டறை"(Camera Obscura)என அழைக்கப்பட்ட ஒரு வகை இருட்டாக்கப்பட்ட அறையில் ஒரு பக்கத்தில் வெளிக்காட்சிகளின் விம்பத்தை விழச்செய்து அதையொட்டிக் கோடுகளை வரைந்து படங்களை உருவாக்கினார்.

 இவர் படங்களை வரையும்போது கைகள் உறுதியாக இல்லாததால், விம்பங்களை நிலையாக இருக்குமாறு செய்வதற்கு வேறு ஏதாவது வழியை கண்டுபிடிக்க 1793-ஆம் ஆண்டு ஆராய்ச்சி செய்தார்.

பிறகு 1824-ஆம் ஆண்டிலேயே நிலைத்திருக்கக்கூடிய ஒளிப்படத்தை இவர் எடுத்ததாகச் சொல்லப்படுகிறது. 1829-ஆம் ஆண்டு லூயிஸ் டாகுரே என்பவருடன் சேர்ந்து பிசோட்டோவகை எனப்பட்ட ஒளிப்பட முறையொன்றை உருவாக்கினார்.

2002-ஆம் ஆண்டில் இவர் 1825-ஆம் ஆண்டில் எடுத்ததாகக் கருதப்படும் உலகின் முதல் ஒளிப்படம் கண்டுபிடிக்கப்பட்டது. இது ஒரு ஏலத்தில் 4,50,000 யூரோக்களுக்கு விற்கப்பட்டது.

ஒளிப்படவியல் துறையின் முன்னோடி ஜோசப் நிசிபோர் நியெப்ஸ் தனது 68-வது வயதில்(1833) மறைந்தார்.

 

Tags :

Share via