தமிழகத்தின் நலன் என்பது இடுப்பில் கட்டும் வேட்டி -தமிழக முதலமைச்சரின் மு. க. ஸ்டாலின்

by Admin / 16-04-2026 08:10:48pm
 தமிழகத்தின் நலன் என்பது இடுப்பில் கட்டும் வேட்டி -தமிழக முதலமைச்சரின் மு. க. ஸ்டாலின்

இன்று தமிழக முதலமைச்சரின் மு. க. ஸ்டாலின் நாமக்கல்லில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மத்திய அரசின் தொகுதி வரையறை சட்டத்தை எதிர்த்து கருப்பு சட்டை அணிந்து வந்து தமது கண்டனத்தை பதிவு செய்தார். மத்திய அரசு கொண்டுவரவுள்ள தொகுதி மறு வரையறை மசோதாவை கருப்பு சட்டம் என விமர்சித்தவர் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாமக்கலில் கருப்புக்கொடி ஏற்றி மசோதாவின் நகரை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டார். திமுகவிற்கு ஆட்சி பதவி என்பது தோளில் போடும் துண்டு போன்றது என்றும் தமிழகத்தின் நலன் என்பது இடுப்பில் கட்டும் வேட்டி போன்றது என்றும் அவர் குறிப்பிட்டார் .பதவிக்காக ஒருபோதும் தமிழகத்தின் உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்பதை அவர் தெளிவுபடுத்தினார் இந்த மசோதா தமிழகத்தின் அரசியல் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் முயற்சி என்று அவர் குற்றம் சாட்டியதோடு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்ற வேண்டும் என்று வேண்டுகோள்விடுத்தார்.

 

Tags :

Share via

More stories

Logo