இன்று நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் மூன்று மசோதாக்களும் அறிமுகப்படுத்தப்பட்டன
இன்று நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் 33 சதவீத மகளிர் இட ஒதுக்கட்டை உடனடியாக நடைமுறைப்படுத்துவது தொடர்பான 131 வது சட்ட திருத்த மசோதா உள்ளிட்ட மூன்று முக்கிய மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த மசோதாக்களை அறிமுகம் செய்வது தொடர்பாக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ஆதரவாக 251 உறுப்பினர்களும் எதிராக 175 உறுப்பினர்களும் வாக்களித்தனர். வாக்கெடுப்பை தொடர்ந்து இந்த மூன்று மசோதாக்களும் மக்களவையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டன .ஒவ்வொரு மசோதா மீதும் தனித்தனியாக வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டு ,2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதிகளை வரையறை செய்ய இச்சட்டம் முன்மொழிகிறது. 2023ல் நிறைவேற்றப்பட்ட மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு வரை காத்திருக்காமல் 2029 பொதுத் தேர்தலிலேயே அமல்படுத்தும் வகையில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த மசோதா மீதான விவாதம் தற்போது மக்களவில் நடைபெற்று வருகின்ற நிலையில் மக்களவை தலைவர் ஓம் பிர்லா இந்த மசோதாக்கள் மீதான இறுதி வாக்கெடுப்பு நாளை மாலை நாலு மணிக்கு நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். பெண்களுக்கு வழங்கப்படும் 33% இட ஒதுக்கீட்டினால் ,ஆண்களுக்கான பிரதிநிதித்துவம் குறையாமல் இருப்பதற்காக தொகுதி எண்ணிக்கை உயர்த்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :



















