"நீட் தேர்வு ரத்து மட்டுமே நிரந்தர தீர்வு" - அன்புமணி

by Staff / 21-07-2024 05:06:15pm

நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறுகையில், “நீட் தேர்வு ரத்து மட்டுமே நிரந்தர தீர்வாகும். இரட்டை அடுக்கு நீட் தேர்வு முறை ஊரக மாணவர்களுக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். நீட் தேர்வை முதனிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என நடத்த மத்திய அரசு திட்டம் தீட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த இரட்டை அடுக்கு நீட் தேர்வு முடிவு ஒரு பிழையை மறைக்க இன்னொரு பெரும்பிழை செய்வதற்கு ஒப்பாகும்” என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories