தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50 குறைந்துள்ளது.

by Editor / 01-10-2022 11:49:15am
தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50 குறைந்துள்ளது.

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று எதிர்பாராத வகையில் குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50 குறைந்துள்ளது. இதனையடுத்து ஒரு சவரன் ரூ.37,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7 குறைந்துள்ளளது. இதனையடுத்து ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,690-க்கு விற்பனை ஆகிறது. விலை மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.62-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via