சிறுமி பாலியல் பலாத்காரம் 142 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை

by Editor / 01-10-2022 12:01:44pm
சிறுமி பாலியல் பலாத்காரம் 142 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை

கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் சிறுமியை இரண்டு ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்துவந்த பாபு(41) என்பவருக்கு 142 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து உள்ளூர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.

பத்தனம்திட்டா கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்ற (முதன்மை போக்சோ) நீதிபதி ஜெயக்குமார் ஜான், குற்றவாளிக்கு 142 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 5 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மாவட்டத்தில் போக்சோ வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு வழங்கப்பட்ட அதிகபட்ச தண்டனை இதுவாகும்.

இருப்பினும், அவர் மொத்தம் 60 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட 10 வயது சிறுமியின் உறவினரான இவர், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்சோ) சட்டம் மற்றும் ஐபிசி பிரிவு 506 (குற்றவியல் மிரட்டல்) ஆகியவற்றின் பல்வேறு பிரிவுகளின் கீழ் தண்டிக்கப்பட்டார்.

 

Tags :

Share via

More stories