விசிகவினரின் மறியலால் போக்குவரத்து பாதிப்பு

by Staff / 04-03-2025 05:22:23pm
விசிகவினரின் மறியலால் போக்குவரத்து பாதிப்பு

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா அலுவலகம் முன்பு இன்று (மார்ச் 4) விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலூர் பகுதியில் பட்டியலின மக்கள் மீதான காவல்துறையின் அடக்குமுறையை கண்டிக்கப்படுவதாக விசிக மாவட்டச் செயலாளர் அரசமுத்து பாண்டியன் தலைமையில் அக்கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். அதனை தொடர்ந்து மேலூர் துணை காவல் கண்காணிப்பாளர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி கலைந்துபோகச் செய்தனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

Tags :

Share via