பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார்

by Editor / 24-03-2025 05:03:59pm
 பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார்

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று சிவகிரி அம்பேத்கர் தெருவை சேர்ந்த பெண்கள் புகார் மனு ஒன்றை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர் அந்த மனுவில் அதே பகுதியில் வசித்து வந்த மேரி என்பவரிடம் 12 பெண்கள் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் தங்களது பெயரில் கடன் வாங்கி மேரிக்கு வழங்கி உள்ளனர் மேலும் அவ்வாறு ஜெயலட்சுமி சரஸ்வதி அருள்ஜோதி உள்ளிட்ட 12 பேரிடம் ஒரு லட்சம் முதல் 2 லட்சம் மூன்று லட்சம் வரை பல லட்ச ரூபாயை அவர் பெற்றுள்ளார் இதனிடையே திடீரென மேரி ஊரைவிட்டு தலைமறைவாக சென்று விட்டார் இந்த நிலையில் கடன் வாங்கி கொடுத்த பெண்கள் கடனை திரும்ப கட்டுவதற்கு சிரமம் அடைந்து தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர் விரைவில் தலை மறைவான மேரி பெண்ணை பிடித்து தங்களுக்கு பணத்தை திருப்பித் தர வேண்டும் என அவர்கள் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்

 

Tags :

Share via