நெல்லையில் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆய்வு

by Editor / 19-07-2021 06:11:13pm
 நெல்லையில் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆய்வு

 

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட வருவாய் துறை அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டம் தமிழக சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு மற்றும் வருவாய் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.


 கூட்டத்தில் வருவாய் துறை  சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பல ஆண்டுகாலமாக ஜாதி சான்றிதழ் வழங்கப்படாமல் இருந்த நெல்லை மாவட்டம் தருவையை சேர்ந்த காட்டு நாயக்கர் சமுதாயத்தினர் 144 பேருக்கு ஜாதி சான்றிதழ், 751 நபர்களுக்கு சமுதாய பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாதம்தோறும் ரூபாய் 1000 உதவித்தொகை வழங்கும் திட்டம் 550  நபர்களுக்கு சுமார் 1.29 கோடி மதிப்பிலான வீட்டுமனை பட்டா, 49 நபர்களுக்கு புதிய குடும்ப அட்டை வழங்குதல் என மொத்தம் ரூ. 2.32 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை  தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு மற்றும் வருவாய் துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் வழங்கினர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராமச்சந்திரன் நெல்லை,தென்காசி கன்னியாகுமரி மாவட்டத்தில் 43,803 மனுக்கள் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்துக்கு வந்துள்ளது.அதில் 13.462 மனுக்கள் முடிவு எட்டப்பட்டுள்ளது .பட்டா வழங்குதல் சர்வே செய்வதில் இருக்கும் தாமதத்தை உடனடியாக நிவர்த்தி செய்யவும் உட்கோட்ட அளவீடு பிரச்சனைகளை வாரம் ஒருமுறை குறைகளை நிவர்த்தி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசின் உழவர் பாதுகாப்பு திட்டத்தை விரிவுபடுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தகுந்த விழிப்புணர்வு செய்து உழவர் பாதுகாப்பு திட்டத்திற்கான பலன்களை பெற நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டுள்ளது என தெரிவித்தார்.

புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டும் அதற்கான தாலுகா உள்ளிட்ட வருவாய் கோட்டங்கள் பிரிக்கப்படாமல் இருக்கிறது
.அதற்கான தகுந்த ஆணையை விரைவில் முதல்வர் வழங்குவார் .வி.ஏ.ஓ உள்ளிட்ட வருவாய் துறையின் காலிபணியிடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சியிடம் கேட்டுள்ளோம்.தமிழகம் முழுதும் 3000 வருவாய் உதவியாளர் பணியிடங்கள் கொரோனா காலத்தால் நிறப்பபடாமல் உள்ளது.விரைவில் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது .

சர்வே செய்ய படாத இடங்களில் நீதிமன்ற ஆணையை பின்பற்றி லைசன்ஸ் சர்வேயர் மூலம் அளவீடு செய்து மனு செய்தால் 15 நாட்களுக்கு அந்த பணிகளை முடிக்க அறிவுறுத்த பட்டுள்ளது .இலவச பட்டாக்கள் பெற்ற பலர் வீடுகள் கட்டபடாமல் இருப்பதால் அந்த பிரச்சனையை தவிர்க்க பட்டா வழங்கும் போது சர்வே செய்து அவர்களுக்கான இடங்களை லே அவுட் செய்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரம் பதிவான அன்றே அந்த இடத்துக்கான பட்டா மாறுதலும் உடனடியாக செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

 

Tags :

Share via