கம்பிளி மகளிர் நியாய விலை கடையில் பணியாளர்முறைகேடுகளில் ஈடுபடுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டால் பரபரப்பு.
தென்காசி மாவட்டம் கம்பளி கிராமத்தில் மகளிர் நியாய விலை கடை பணியாளர் பொதுமக்களை அநாகரீகமாக பேசுவதாகவும், பொருட்களை சரியான அளவு வழங்காமல் முறைகேடுகளில் ஈடுபடுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டால் பரபரப்பு
தென்காசி மாவட்டம் ஆய்க்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட கம்பிளி பகுதியில் மகளிர் நியாய விலை கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக செண்பக ராஜேஸ்வரி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இவர் நியாய விலை கடையை சரியான நேரத்திற்கு வருவது இல்லை, பொதுமக்களிடம் அநாகரீயமான வார்த்தைகளை பேசுவதுடன் பொருட்களை முறையாக வழங்குவது இல்லை என குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
மேலும் பொருட்கள் வெளிச்சந்தையில் சட்டத்திற்கு புறம்பாக விற்கப்படுவதாகவும் இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர் எனவே இவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பதுடன் இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் ஆய்க்குடி பேரூராட்சித்தலைவர் அளித்த புகாரின் அடிப்படையில் மாவட்ட வழங்கல் அலுவலர் இந்த ரேஷன் கடையில்
ஆய்வு மேற்கொண்டுசென்ற பின்னரும் பலமுறை புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதுடன் விரைவில் இது தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் மகளிர் நியாய விலை கடையாக செயல்பட்டு வருவதை மாற்றி அரசு நியாய விலை கடையாக அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடதக்கது.
Tags : முறைகேடுகளில் ஈடுபடுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டால் பரபரப்பு