அதிமுக சிதறும் என்ற முதல்வரின் எண்ணம் ஈடேறாது

by Staff / 15-04-2024 01:28:31pm
அதிமுக சிதறும் என்ற முதல்வரின் எண்ணம் ஈடேறாது

மக்களவை தேர்தல் காஞ்சிபுரம் அதிமுக வேட்பாளர் ராஜசேகரை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவர் பேசுகையில், “அதிமுக ஆட்சியில் போடப்பட்ட திட்டங்களால்தான் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க 50 லட்சம் பேர் குவிந்த போதும், எங்கள் அரசு சிறப்பான ஏற்பாடு செய்தது. அதிமுக இரண்டாக, மூன்றாக சிதறும் என்ற முதல்வர் ஸ்டாலினின் எண்ணம் ஈடேறாது, மக்களுக்கு சேவை செய்வது நாங்கள் தான்” என்றார்.

 

Tags :

Share via

More stories