கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிஐ விசாரணை:ஆளுநரை சந்தித்த எடப்பாடி பழனிசாமி. 

by Editor / 26-06-2024 12:03:12am
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிஐ விசாரணை:ஆளுநரை சந்தித்த எடப்பாடி பழனிசாமி. 

சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.  சட்டப்பேரவையில் ஏற்கனவே இரண்டு நாட்கள் அதிமுகவினர் கருப்பு சட்டை அணிந்து வந்து கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக எதிர்ப்பு தெரிவிக்க அணிந்து வந்தனர்.

மேலும்,  கேள்வி நேரத்திற்கு முன்பே கள்ளக்குறிச்சி விவாகரம் தொடர்பாக விவாதிக்க கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்து பேரவை நிகழ்வுகளை புறக்கணித்தனர்.  இதனைத் தொடர்ந்து நேற்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து வருவாய் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கருப்பு சட்டை அணிந்து அதிமுக தரப்பில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.

இந்த நிலையில் சட்டப்பேரவை இன்று காலை 9:30மணிக்கு தொடங்கியதும் சபாநாயகர் அப்பாவு திருக்குறளை வாசித்துவிட்டு தொடர்ந்து பேசத் தொடங்கினார்.  உடனே  அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அவையில் அமளியில் ஈடுபட்டனர்.  மேலும் சபாநாயகர் இருக்கை முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தியதால் அவர்களை வெளியேற்ற அவைக் காவலர்களுக்கு அப்பாவு உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநர் மாளிகைக்குச் சென்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்தனர்.  அதிமுகவைச் சார்ந்த  61 எம்எல்ஏக்கள் மற்றும் புரட்சி பாரத கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தியுடன் சேர்த்து 62 எம்எல்ஏக்கள் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம்,  தம்பிதுரை,  சந்திரசேகரன் உள்ளிட்டோர் இன்று கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
 

 

Tags : கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிஐ விசாரணை:ஆளுநரை சந்தித்த எடப்பாடி பழனிசாமி. 

Share via

More stories