அபுதாபியில் இந்து கோவிலை திறந்து வைக்கும் மோடி
அபுதாபியில் பாப்ஸ் இந்து கோவிலை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். இந்த விழா அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும். இதற்காக, டெல்லி, லோக் கல்யாண் மார்க்கில் உள்ள மோடியின் அதிகாரப்பூர்வ இல்லத்தில், சுவாமி ஈஸ்வரச்சரந்தாஸ் மற்றும் சுவாமி பிரம்மவிஹாரிதாஸ் ஆகியோர் அழைப்பிதழை வழங்கினர். மோடி கோவில் திறப்பு விழாவில் கலந்து கொள்ள ஒப்புக்கொண்டதாக பாப்ஸ் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
Tags :