நரசிம்மர் ஜெயந்தி விரதம்

by Editor / 24-07-2021 07:57:15pm
 நரசிம்மர் ஜெயந்தி விரதம்

 

மகா விஷ்ணுவின் தசாவதாரங்களில் 4வது அவதாரம் தான் நரசிம்ம அவதாரம். 2021ம் ஆண்டு இன்று (மே மாதம் 25ம் தேதி) நரசிம்மர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.


இன்று காலை இந்த விரதத்தை தொடங்கி, நாள் முழுவதும் நரசிம்மரின் நினைவுடன் ஆராதித்து வழிபட்டு, மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 வரை பூஜை, புனஸ்காரம் செய்து வழிபட்டு விரதத்தை முடிப்பது நல்லது.
நரசிம்மருக்கு சர்க்கரை பொங்கலும், பானகம் மற்றும் அவரை குளுமையாக்கும் வகையில் சில குளுமையான பொருட்களை வைத்து பூஜை செய்து வழிபடுவது மிக சிறந்தது.


பெருமாளுக்கு உகந்த மலர்கள், நைவேத்தியம், வஸ்திரத்தை அணிவித்து வழிபாடு செய்வது நல்லது.
நரசிம்மர் காயத்ரி மந்திரம்
ஓம் வஜ்ர நாகாய வித்மஹே
தீக்ஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி
தந்நோ நரசிம்ஹப் ப்ரசோதயாத்
நரசிம்மர் மூல மந்திரம்
உக்ரம் வீரம் மஹா விஷ்ணும்,
ஜ்வலந்தம் சர்வதோ முகம் நரசிம்மம்,
பீஷணாம் பத்ரம் ம்ருத்யம் ம்ருத்யம் நமாம் யஹம்

நரசிம்மரின் இந்த மூல மந்திரத்தை 108 முறை சொல்லி செவ்வரளி உள்ளிட்ட சிவப்பு நிற மலர்களையும், துளசி பயன்படுத்தி நரசிம்மரை அர்ச்சனை செய்து வணங்குவது நல்லது.

 

Tags :

Share via