திருமணம் ஆகாத பெண்களுக்கு அதிரடி தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம்
டெல்லியை சேர்ந்த திருமணமாகாத 25 வயது பெண், பரஸ்பர சம்மதத்தின் பேரில் பாலியல் உறவால் கர்ப்பம் அடைந்தார். இந்நிலையில், கர்ப்பத்தை கலைக்க, உச்ச நீதிமன்றத்தில் அனுமதி கோரிய வழக்கில், நீதிபதிகள் சந்திராசூட், சூர்யகாந்த் மற்றும் போபண்ணா அமர்வில், திருமணம் ஆகாத பெண்களும் சட்டப்படி கருக்கலைப்பு செய்துகொள்ள உரிமை உண்டு. கருக்கலைப்புக்கான உரிமை என்பது திருமணத்தின் மூலம் மட்டுமே கிடைக்கும் என்ற நிலைமையை மாற்றுவது அவசியம். பாதுகாப்பற்ற முறையில் கருக்கலைப்பு செய்து கொள்வது மட்டுமே தடுக்கப்பட வேண்டியது.
கருக்கலைப்பு உரிமையைப் பொறுத்தவரை, அந்த வித்தியாசம் இல்லை. குழந்தை பெற்றுகொள்ளும் சுய உரிமைகள் திருமணமாகாத பெண்களுக்கு திருமணமான பெண்ணைப் போன்ற உரிமைகளை வழங்குகின்றன என தெரிவித்துள்ளனர்.
Tags :