ராணுவ முகாமில். நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலியான இருவா் தமிழகத்தைச்சோ்ந்தவா்கள்.
பஞ்சாப் பதிண்டா ராணுவ முகாமில்.அதிகாலையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு ராணுவ வீரர்கள் முகாமில் இறந்து கிடந்தனர் .இதில் இருவா் தமிழகத்தைச்சோ்ந்தவா்கள். துப்பாக்கி சூட்டில் பலியான யோகேஷ் குமார் தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள மூணாம் பட்டியைச் சேர்ந்தவர் மற்றொருவரான கமலேஷ் சேலம் மாவட்டம் மேட்டூர் வனவாசி அருகே உள்ள பனங்காட்டைச் சேர்ந்தவர் இவரது உடல் இன்று மாலை சொந்த ஊருக்கு கொண்டு வரப்படுகிறது இச்சம்பவத்தை தொடர்ந்து ராணுவ முகாம் மற்றும் அதை சுற்றியுள்ள அனைத்து இடங்களையும் ராணுவ கட்டுக்குப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டு தீவிர புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Tags :



















