பாளை. சிறை அலுவலக  கண்காணிப்பாளர் மரணம்

by Editor / 29-04-2021 04:48:08pm
பாளை. சிறை அலுவலக  கண்காணிப்பாளர் மரணம்

 


தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியைச் சேர்ந்த தங்கையா (50), பாளையங்கோட்டை மத்திய சிறையில் அலுவலகக் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்தார். சமீபத்தில் இவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், தூத்துக்கு அரசு மருத்துவமனையில் சிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில்,  சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், பாளையங்கோட்டை சிறையில் கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் அலுவலர்கள் மிகுந்த அலட்சியம்காட்டுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தற்போது உயிரிழந்த தங்கையாவை தவிர, சிறையில் மேலும் ஆறு பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது..

 

Tags :

Share via

More stories