இந்திய ஒற்றுமை யாத்திரை இன்றுடன் நிறைவு

by Staff / 30-01-2023 12:20:48pm
இந்திய ஒற்றுமை யாத்திரை இன்றுடன் நிறைவு

முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை இன்றுடன் நிறைவடைகிறது. இதையொட்டி ஸ்ரீநகரில் இன்று பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்திய ஒற்றுமை யாத்திரை ஸ்ரீநகரில் உள்ள ஷேர்-ஏ-காஷ்மீர் ஸ்டேடியத்தில் ஒரு கூட்டத்துடன் அதிகாரப்பூர்வமாக முடிவடையும். கடந்த ஆண்டு செப்டம்பரில் கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட பல மாவட்டங்கள் வழியாக 4,084 கிலோ மீட்டர் தூரத்தை 134 நாட்கள் கடந்து இன்று காஷ்மீரில் நிறைவடைகிறது.

 

Tags :

Share via